ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக சோலார் பேனல்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகின.
பெருகி வரும் மக்கள் தொகையால் மின்சார தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பெரிய அளவில் பூர்த்தி செய்பவையாக அனல் மற்றும் அனுமின் நிலையங்களே விளங்கி வருகின்றன. இது ஒரு புறமிருக்க இயற்கையை பாதிக்காத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது சவால் நிறைந்ததாக உள்ளது.
அந்த வகையில் காற்றாலை, நீர் மற்றும் சூரிய சக்தி ஆற்றல்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதன்படி ஸ்பெயினில் சூரிய மின் உற்பத்திக்காக ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன.
அதேபோல் சாலைகளில் உள்ள மின் விளக்குகளும், சோலார் பேனல்கள் மூலம் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு நிலவும் கடும் வெப்பத்தால் சோலார் பேனல்கள் பற்றி எரிந்து சேதமாகின. சூரியனிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் பேனல்கள் வெப்பத்தால் எரிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.