மத்திய பிரதேச மாநிலம் பாண்டுர்ணாவில், இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழாவில், நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர்.
கோட்மார் என்ற பெயரில் 400 ஆண்டுகளாக இந்த பாரம்பரிய விநோத திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக 12 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 58 மருத்துவர்கள் மற்றும் 200 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சுமார் 600 போலீசாரும் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஜாம் நதியின் இரு கரைகளிலும் உள்ள பாண்டுர்ணா மற்றும் சவர்கான் கிராம மக்கள் பங்கேற்றனர். இதையடுத்து இரண்டு கிராம மக்களும் சரமாரியாக கல்லெறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த விநோத திருவிழாவில் மொத்தம் 934 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.