16வது ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கஜகஸ்தானின் ஷிம்கெண்டில் 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்கீட் பிரிவு, ஏர் ரைபிள் பிரிவு உள்ளிட்டவற்றில் ஆடவர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்டவற்றில் இந்தியா 26 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் பதக்கங்களை வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த இளவேனில் வாலறிவன், நரேன் பிரணவ், ஹர்த்யா ஸ்ரீ கொண்டூர், பூமி குலியா மற்றும் அனன்யா ஆகியோருக்கு பூ மாலை, பண மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.