கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருதுவிடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 350 காளைகள் விழாவில் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.