மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள கலைக்கூடத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ரசாயன பவுடர் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டதைக் கண்டறிந்த அதிகாரிகள் மொத்த கலைக்கூடத்திற்கும் சீல்வைத்து சென்றனர்.
இதற்குப் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தின் சீலை அகற்றி மீண்டும் ஆய்வு செய்தனர்.
அப்போது, 10 சிலைகள் மட்டுமே ரசாயன பவுடர் கொண்டு தயாரிக்கப்பட்டதை அறிந்த அதிகாரிகள், மற்ற சிலைகளை விற்பனைக்கு அனுமதித்தனர்.