வால்பாறையில் சாலை இல்லாத மலைப்பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை 8 கிலோ மீட்டர் தூரம் தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உடுமன் பாறை செட்டில்மெண்டில் வசிக்கும் முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவ சிகிச்சைக்காக 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட்டிற்கு தொட்டில் கட்டி மலைவாழ் மக்கள் தூக்கிச் சென்றனர்.
மலைப்பகுதியில் சாலைவசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.