ஸ்பெயின் முழுவதும் பரவி நான்கு பேரைக் கொன்ற காட்டுத்தீயானது, ஸ்பெயினில் சுமார் நான்கு லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியையும், போர்ச்சுகலில் சுமார் 2 புள்ளி 60 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியையும் நாசமாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் நிலவும் வெப்ப அலைகள் காரணமாக, தெற்கு ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ பரவி வருகிறது.
இருப்பினும், காட்டுத்தீ தற்போது தணியத் தொடங்கியுள்ளதாகவும், தீயை கிட்டதட்ட கட்டுப்படுத்தி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.