கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய மின் சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
காடுவெட்டிபாளையம், சோமனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாமில் பலர் பங்கேற்றனர்.
முகாமில் பேசிய அதிகாரிகள், வீடுகளில் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், மத்திய அரசின் 60 சதவீத மானியம் கிடைக்கும் எனவும் அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் எனவும் தெரிவித்தனர்.