அமெரிக்கா எல்லையில் விளையாடிய சிறுவன் தற்செயலாகக் கனடா எல்லைக்குள் நுழைந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கா, கனடா எல்லையில் சுழலும் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதவில் சிறுவன் ஒருவன் விளையாடி உள்ளான்.
அப்போது சிறுவன் தற்செயலாகக் கனடா எல்லைக்குள் நுழைந்தான். இதனைக் கண்ட பெற்றோர் கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவனை எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் இணைய வாசிகள் சிறுவனைப் பாராட்டியுள்ளனர். கனடா தான் அந்தச் சிறுவனுக்குச் சிறந்த இடம் எனச் சிலர் கூறியுள்ளனர்.
மற்ற சிலரோ இந்தக் குடும்பத்திலேயே சிறுவன்தான் மிகவும் புத்திசாலியான நபர் எனத் தெரிவித்துள்ளனர். சிறுவன் அற்புதமாக அமெரிக்காவை விட்டுத் தப்பித்துவிட்டான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் கனடாவில் மகிழ்ச்சியாக இருப்பான் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.