நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைச் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பரமத்திவேலூர்க் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது பேருந்துநிலையத்தில் இளைஞர் ஒருவர், தனது பைக்கில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.