அதிமுகப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சூர்யமூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை எனவும், அதிமுக வேட்பாளரை எதிர்த்து சூர்யமூர்த்தி போட்டியிட்டதாகவும் இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்சியில் உறுப்பினராக இல்லாத நபர், கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சூர்யமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி அதிமுகவின் உறுப்பினராக தொடர்வதாக வாதம் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.