தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனத்தில் திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மூலம் தொடங்கப்பட்ட இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னைக் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அருகே தொடங்கப்பட்ட இதழியல் நிறுவனத்தில் பயிற்சிக்காக இணைந்திருக்கும் மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அப்போது பேசிய இரு மாணவர்களும் தாங்கள் திமுகவின் இளம் பேச்சாளர்கள் எனவும், திமுகப் பொதுக்கூட்டங்களில் ஏற்கனவே பேசியவர்கள் எனவும் தங்களை அறிமுகப்படுத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
திமுகவின் மேடைகளில் பேசுவதற்காகத் தயார் செய்யப்பட்ட இளம் பேச்சாளர்களுக்கு அரசு பணத்தில் பட்டம் கொடுக்கவே இந்த இதழியல் நிறுவனம் தொடங்கப்பட்டதா என்ற கேள்விகளை இணையதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.