கோவை அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான விவகாரத்தில் 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் இருவர், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரில், சமபந்தப்பட்ட 2 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியம், சுஜாதா உள்ளிட்ட 5 பேர், பல்வேறு பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 பேரும் நிர்வாகக் காரணங்களுக்காகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.