மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான ஆர்.சி.யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் முன்வருவதில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
ஏழை, எளிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.