நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போனி கபூரின் விண்ணப்பம் மீது விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.