தூத்துக்குடி மாவட்டம், புதூர்ப் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ப் புவிராஜா தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.
பின்னர்ச் செய்தியாளர்களிடம் பேசிய புவிராஜா, 2016 முதல் தமிழ்நாடு வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் வங்கி கடன் வசூலில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.