நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணைக் காட்ட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி மக்கள் நலனுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், நீர்நிலைகளில் வசிப்போருக்கு மாற்று இடம் ஒதுக்கி, இலவசப் பட்டா வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.