ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹவுத்தி நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹவுத்தியின் ஏவுகணைத் தளங்கள், அரசு இடங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாவிட்டாலும், சனா நகரம் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது.