தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு வருகைத் தந்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆக்சியம் 4 திட்டத்தின் மூலம் இந்தியாவின் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர்த் தனது சொந்த ஊரான லக்னோவிற்கு வருகைத் தந்தார். முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த அவருக்குப் பள்ளி மாணவர்கள் விண்வெளி வீரர்கள் உடையணிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து தேசிய கொடியை ஏந்தியும், இசை வாத்தியங்கள் முழங்கவும் சுபன்ஷு சுக்லாவுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தான் படித்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுபன்ஷு சுக்லா விடாமுயற்சிதான் வெற்றிக்கான ஒரே வழி எனத் தெரிவித்தார்.