பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என மனிதாபிமான அடிப்படையில் இந்தியா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் கனமழைப் பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இதுகுறித்து எச்சரித்துள்ளது. வழக்கமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளின் ஆணையர்களிடையே இதுபோன்ற தகவல் பரிமாற்றம் நடைபெறும்.
இருப்பினும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போதிலிருந்து எந்தத் தகவல் பரிமாற்றமும் இல்லாத சூழலில், தூதரகம் மூலம் எச்சரிக்கை வெள்ளம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.