காசா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியான சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர்ப் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது தவறுதலாக நடந்த ஒரு துயரமான விபத்து என இஸ்ரேல் பிரதமர்ப் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களைக் காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.