திருவாரூர் அருகே பர்னிச்சர் கடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் பணம் கேட்டு மிரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.
திருத்துறைப்பூண்டி அடுத்த புலிவலம் பகுதியில் ஜெயபாலன் என்பவருக்குச் சொந்தமான பர்னிச்சர்க் கடை செயல்பட்டு வருகிறது.
கடந்த 22ம் தேதி விசிகவைச் சேர்ந்த பூபாலன், ஸ்டாலின் ஆகியோர்க் கடைக்கு வந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் விசிகக் கூட்டத்திற்கு பணம் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கடை உரிமையாளர் ஜெயபாலனைச் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்கள் பேசினர். அப்போது ஊருக்கு வந்து பணம் தருவதாக கூறி அவர் துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கடை ஊழியர்களைக் கடுமையாக மிரட்டினர். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவில் பதிவானது.