ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
ஆல்பா 17 திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர்க் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிநவீன ரகசிய தொழில் நுட்பத்துடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே இந்த இரு போர்க்கப்பல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தக் கப்பல்களை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு போர்க் கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை எனத் தெரிவித்தார்.
நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல், பெரும் சவாலாக இருந்ததாகக் கூறிய அவர், அதற்கு நாம், மிகுந்த யோசனையுடனும், கவனத்துடனும் பதிலளித்ததாகக் குறிப்பிட்டார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம், பயங்கரவாத தளங்களை வேரோடு அழித்ததாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.