போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!
Aug 16, 2026, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்குவரத்தை எளிதாக மாற்றும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் போக்குவரத்தை அடியோடு மாற்றக்கூடிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது பின்லாந்து. அது என்ன தற்போது பார்க்கலாம்.

என்ஜின் இல்லை…. சக்கரங்கள் இல்லை… இரைச்சலும் இல்லை… மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய க்கூடிய கார்கோ டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறது பின்லாந்து.

OULU நகரில் உலகின் முதல் superconducting vacuum tube system-ஐ வெற்றிகரமாகப் பரிசோதித்து பார்த்திருக்கின்றனர்ப் பின்லாந்து பொறியாளர்கள்… VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட superconducting vacuum tube system சரக்குப் போக்குவரத்தை அடியோடு மாற்ற போகிறது.

மூடிய குழாய் அமைப்பிற்குள், எவ்வித என்ஜின்களோ, சக்கரங்களோ, தண்டவாளங்களோ இல்லாமல், விண்கலம் போன்ற அமைப்பான CAPSULES அசுர வேகத்தில் நகர முடியும் என்பதுதான் இந்த அசாத்திய கண்டுபிடிப்பின் அதிசயிக்க வைக்கும் திறன்.

10 கிலோ மீட்டர்ச் சோதனைப் பாதையில், 520 கிலோ மீட்டர் வேகத்தில் CAPSULE-கள் பயணித்த நிலையில், சோதனை வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை எளிதாக விரிவுபடுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

high-temperature superconductors என்ற தொழில்நுட்பத்தில் இந்த நவீன, எதிர்கால போக்குவரத்து அமைப்பானது உருவாக்கப்பட்டிருக்கிறது. குளிர்விக்கப்பட்ட, காந்த பாதைக்கு மேலே வைக்கப்படும்போது ஏற்படும் உந்துவிசையால், தொடுதலோ, உராய்வோ இல்லாமல் CAPSULES பயணிக்கும் என்றும், காற்றில் அழுத்தத்தைப் பயன்படுத்தி நிறுத்தவோ, இயக்கவோ முடியும் என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள மின்சார ரயில்கள் அல்லது சரக்கு விமானங்களை விட 80% குறைவான ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது பலரையும் வியக்க வைக்கிறது. CAPSULES-களுக்குள், நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்கும் வசதிகள் உள்ளதால், மருந்துப் பொருட்கள், மின்னணு பொருட்கள் அல்லது உணவுகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, மின்கடத்திகள், காந்தங்கள், காற்று ஆகியவற்றை கொண்டே இயங்கும் பின்லாந்தின் தொழில்நுட்பம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், மாசு இல்லாத மற்றும் மிக விரைவான சரக்கு போக்குவரத்தைக் கொண்டு வரக்கூடும் துறைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதி, வேகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை அடியோடு மாற்றியமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: பின்லாந்துNew revolution in transportation: Amazing future technologyFinland has invented a cargo transport system
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

Next Post

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

Related News

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies