கர்நாடகாவில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த இளம்பெண்ணை, அவரது ஆண் நண்பர் வாயில் வெடிவைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டத்திலுள்ள ஹிரசனஹில் கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா என்ற இளம் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சித்தராஜு என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அண்மையில் தனிமையில் சந்தித்த ரக்ஷிதாவிற்கும் சித்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சித்தராஜு ரக்ஷிதாவின் வாயில் வெடிவைத்து அவரைக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாகச் சித்தராஜுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.