சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டச்சேடு பகுதியில் உள்ள கல்லேரி மலை எஸ்டேட்டில் கிரேன் வாகன உதவியுடன் வாகனங்களில் மரமேற்றும் பணி நடைபெற்று வந்தது.
ராணிப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர்க் கிரேனை இயக்கி வந்தார். அப்போது திடீரெனப் பழுதான கிரேன் வாகனம், பாரம் தாங்காமல் பின்னோக்கிச் சென்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த கிரேன் ஆப்பரேட்டர் தாமோதரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.