ஈரோட்டில் கேஸ் குழாய் பதிக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தால், தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லரசம்பட்டியில் வீடுகளுக்குக் குழாய் மூலம் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் பணிகள், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதற்காகப் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் நிறைவடைய மிகவும் தாமதமாவதாகக் கூறப்படுகிறது.
இதனால் தினந்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகும் மக்கள், குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.