கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பட்டியலின மக்களைத் தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரும்பூர்ப் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் நாளைக் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்தநிலையில் விழாவில் பட்டியலின மக்கள் பங்கேற்க முடியாமல் சிலர்த் தடுப்பதாக கூறி பூபாலன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, எவரேனும் தடுத்தால் காவல்துறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.
மேலும் கோயில் குடமுழுக்கு விழாவில் உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.