அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற டேங்கோ நடனப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
நவீன வரலாற்றின் மிகவும் பிரபலமான நடனங்களில் ஒன்றான டேங்கோ, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மற்றும் உருகுவேயின் மான்டிவீடியோ நகரங்களில் தோன்றியது.
இந்தப் பாரம்பரியம் மிக்க நடனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அர்ஜென்டினா தலைநகர்ப் பியூனஸ் அயர்ஸ் நகரில் சர்வதேச டேங்கோ நடனப்போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெறும் போட்டியில் இத்தாலி, கொலம்பியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த டேங்கோ நடனக் கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.
ஆணும் பெண்ணும் கைகோர்த்து மெல்லிய இசைக்கு நடனமாட, போட்டியைக் காண உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் பியூனஸ் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.