மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பருவமழைப் பெய்து வருகிறது.
கனமழை மற்றும் வெள்ளத்தால், இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.
இதனிடையே தாவி நதி மற்றும் ராவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குத் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உரிய நேரத்தில் இந்தியா எச்சரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இதன் மூலம் அவர்களது உயிர்கள் காப்பாற்றப்பட்டன.