லிதுவேனியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இங்கா ருகினீனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் பிரதமராக இருந்த கிண்டவுடாஸ் பலுகாஸ், தொழில்களில் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்துச் சமீபத்தில் அவர்த் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்தே புதிய பிரதமராக இங்கா ருகினீனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்புதான், சமூக ஜனநாயகக் கட்சியில் இங்கா ருகினீனே சேர்ந்தார்.
தேர்தலில் போட்டியிட்டுப் பார்லிமென்ட் உறுப்பினரான இங்கா ருகினீனே, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.