அமெரிக்க விசா உள்ள இந்திய குடிமக்களுக்கான நுழைவு விதிகளை அர்ஜென்டினா தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்தியாவிற்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்க விசா வைத்துள்ள இந்திய குடிமக்கள் அர்ஜென்டினாவிற்கு வருவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்குச் சுற்றுலா விசா மூலம் செல்லும் இந்தியர்கள், இனி தனித்தனியாக விசா விண்ணப்பிக்காமல் அர்ஜென்டினாவில் நுழைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளை வரவேற்க அர்ஜென்டினா அரசு தயாராக உள்ளதாகவும் மரியானோ கௌசினோ குறிப்பிட்டுள்ளார்.