உக்ரைன் தலைநகர் கீவின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது.
வின்னிட்சியா, செர்னிவ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் பல்வேறு குடியிருப்புகள், பள்ளிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
பல பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர்ப் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.