பீகார் மாநில எல்லைக்குள் மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக அம்மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
காவல்துறைக்குக் கிடைத்த உளவுத்துறைத் தகவலின்படி, கடந்த வாரம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் உசேன் மற்றும் உஸ்மான் ஆகியோர் நேபாளம் வழியாகப் பீகார் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
இதையடுத்து எல்லை மாவட்டங்களில் அவர்களது பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களுடன் கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளது.