வானில் பறந்தபடி இசை நிகழ்ச்சி நடத்திய முதல் பெண் DJ என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த DJ TRYPS படைத்துள்ளார்.
டிஸ்க் ஜாக்கி எனும் டிஜே என்பவர் இசை நிகழ்ச்சிகள், அல்லது நடன அரங்குகளில் பார்வையாளர்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட இசையைத் தேர்ந்தெடுத்து, வாசிக்கும் ஒரு கலைஞர் ஆவார்.
டிஜேக்கள் இசைக்கலவைகளை உருவாக்குவதற்கும், ஆற்றல் மிக்க இசை அனுபவத்தை வழங்குவதற்கும், இசைப் பாடல்களைச் சரியான நேரத்தில் கலந்து, தடையின்றி ஒலிபரப்புவதற்கும் இசைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த டிஜே இசை நிகழ்ச்சிகள் நட்சத்திர விடுதிகள், நடன அரங்குகள், திருமண விழாக்களிலும் நடத்தப்படுகின்றன. தற்போது இவற்றை எல்லாம் கடந்து நடுவானில் 10 ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட்டில் பறந்தபடி இசையை ஒலிக்கவிட்டுச் சாதனை படைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த DJ TRYPS.
வானில் பறந்தபடி இசை நிகழ்ச்சி நடத்திய முதல் பெண் DJ என்ற சாதனையையும் DJ TRYPS படைத்துள்ளார். அவரின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.