சிவகங்கை அருகே அனுமதியின்றி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தின் போது காளை முட்டியதில் சாலையில் சென்ற மூதாட்டி தூக்கி வீசப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது.
கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் அனுமதியின்றி அப்பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை – காளையார்கோவில் சாலையில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரமாக நடந்து சென்ற மூதாட்டிய காளை முட்டியது. இதில் அவர்த் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.