இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு பெரும் தவறு எனப் பிற நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதுகுறித்துச் சீனா, இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அதன்படி அதிபர் டிரம்பின் 4 தொலைபேசி அழைப்புகளை எடுக்கப் பிரதமர் மோடி மறுத்துவிட்டதாக ஜெர்மன் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது பிரதமர் மோடியின் அமெரிக்கா மீதான அதிருப்தியையும், அவரது எச்சரிக்கையையும் காட்டுவதாகவும் கூறியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள், டிரம்பின் வரி விதிப்பு பெரும் தவறு என்றும், இது பொறுப்பற்ற, தேவையற்ற தாக்குதல் என்றும் கூறியுள்ளன.
அதேபோல் இந்த வரி விதிப்பு அரசியல் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான விரிசல் அதிகரித்து வருவதாகச் சீன ஊடகங்கள் கூறியுள்ளன.