ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் மின்சார வாகனங்களுக்கான போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரிட்ஜ்ஸ்டோன் உலகச் சூரிய சக்தி சவால் 2025 என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் போட்டி கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வரும் 31ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி சூரிய நுட்பத்திற்கான உலகின் முன்னணி புதுமையாக்கச் சவாலாக கருதப்படுகிறது.
டார்வின் நகரில் இருந்து அடிலைடு நகரம் வரைச் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட கார்கள் பங்கேற்றுள்ளன.
தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற வாகனங்கள் வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகின்றன. ஒருவாரம் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஆங்காங்க தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.