ஆம்பூர் கலவர வழக்கில் 154 பேரை விடுவித்தும், 22 பேர் குற்றவாளிகள் எனவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015-ல் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 191 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 191 பேரில், 154 பேரை விடுதலைச் செய்த நீதிபதி மீனாகுமாரி, மீதமுள்ள 22 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 22 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி,
கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொது சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி மீனாகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.