தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
தமிழக டிஜிபியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால், சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இன்று அவருக்கு பணி நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதனிடையே, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவையும் தமிழக அரசு இதுவரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பாமல் உள்ளது. ஆகையால் தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபியாக, ஐபிஎஸ் அதிகாரி ஜி.வெங்கட்ராமனை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
30ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.