வட கரோலினா கடற்பகுதியின் மேல் சிறிய ரக விமானம் ஒன்று பயணித்தது.
அப்போது தொழில் நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை விமானி அவசர அவசரமாகக் கடலில் தரையிறக்கினார்.
இதையறிந்த கடலோரக் காவல் படையினர், விமானம் தரையிறங்கிய பகுதிக்குப் படகு மூலம் சென்றடைந்தனர்.
தொடர்ந்து உயிருக்குப் போராடிய விமானியைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.