விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் தூய்மைப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த மூக்கம்மாள் என்பவர், அருப்புக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் பாலவநத்தம் பஜார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி மூக்கம்மாள் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க டயரில் சிக்கிய அவர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.