அமெரிக்கவின் புகழ் பெற்ற உணவு நிறுவனமான கிராக்கர் பேரல் தனது லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
தெற்கு பாணி உணவு வகைகளுக்குப் பிரபலமான கிராக்கர் பேரல் உணவகம் 1969 இல் டான் எவின்ஸ் மற்றும் டாமி லோவ் ஆகியோரால் நிறுவப்பட்டது.
அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற உணவகமான கிராக்கர் பேரல் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு வர்த்தகத்திலும் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த நிறுவனம் ஐந்தாவது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகப் புதிய லோகோவை வெளியிட்டது.
இதற்கு அமெரிக்கர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பழைய லோகோவிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில் கிராக்கல் பேரல் நிறுவனம் பழைய லோகோவிற்கே மாறுவதாகத் தெரிவித்துள்ளது.