மெக்சிகோ நகரத்தில் உள்ள குவாடலூப் தேவாலயத்திற்குக் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை மேற்கொண்டனர்.
மெக்சிகோ நகரத்தின் குவாடலூப் தேவாலயத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டு தோறும் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரைச் செல்வது வழக்கம். அந்த வகையில் 25 ஆவது ஆண்டாகக் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் இசைக் கருவிகள் வாசித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் தேவலாயத்தை அடைந்த அவர்களுக்குப் பாதிரியார்கள் புனித நீர்த் தெளித்து ஆசி வழங்கினர்.