மடப்புரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்பேரில், நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சில நாட்களுக்கு முன்பு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், நகையை எடுத்த நபர்கள் UNKNOWN என குறிப்பிட்டுள்ளனர்.