பிரேசிலின் பரானாவில் வீசிய புயல் காரணமாகக் கட்டுமான பொருட்கள் விற்பனைச் செய்யும் நிறுவனத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
பரானா மாகாணத்தில் உள்ள காஸ்ட்ரோ நகரில் புயலுடன் ஆலங்கட்டி மழைப் பெய்து வருகிறது.
இந்நிலையில் காஸ்ட்ரோ பகுதியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் புயல் காரணமாக மேற்கூரைத் திடீரென இடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.