சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மூதாட்டியைக் கொலை செய்து நகைக்கொள்ளையில் ஈடுபட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேவகோட்டை அடுத்த கோனேரி வயல் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி காளியம்மாளைக் கொலை செய்த நபர்கள் ஏழரைச் சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் மூதாட்டியைக் கொன்ற தங்கராஜ், கருப்புராஜ், சின்னச்சாமி உட்பட 6 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி கோகுல் முருகன், அனைவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.