விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நகரப்பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் ஆங்கில பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் பால் வின்சென்ட் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகத் தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பால் வின்சென்டை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்ப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.