நீலகிரி மாவட்டம் உதகை அருகே அழகர்மலைக் கிராமத்திற்கு பல ஆண்டுகளாகப் பேருந்து வசதியில்லை எனக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர் மலைக் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், பள்ளி மாணவ, மாணவிகள், 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைகளுக்காகவும் பல கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருப்பதாகக் கூறும் கிராம மக்கள் , அரசுப் பேருந்து சேவை வேண்டி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பயனில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.