சவுதி அரேபியாவில் உள்ள ரிஜால் ஆல்மா மலைப் பகுதியில், இளம் பொறியாளர் ஒருவர் தனது வீட்டைச் சுற்றுலா தளமாக மாற்றியுள்ளார்.
வளர்ந்து வரும் நவீனக் காலத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சவுதி அரேபியாவின் ரிஜால் ஆல்மா மலைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் முகமது அல் அல்மாயின் யோசனைப் பலரையும் கவர்ந்துள்ளது. பொறியியல் பட்டதாரியான இவர், தனது வீட்டையே சுற்றுலா தளமாக மாற்றியுள்ளார்.
வீட்டில் பாரம்பரிய தேனீ வளர்ப்பு முறைகளைக் காட்சிப்படுத்தி உள்ளதோடு, 50க்கும் மேற்பட்ட தேன் வகைகளைச் சுற்றுலா பயணிகள் சுவைப்பதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
ஹனி காட்டேஜ் என அனைவராலும் அறியப்படும் இந்த வீட்டைப் பார்வையிட, தினமும் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகைத் தருகின்றனர்.